சென்னை:
கவின், ருஹானி சர்மா,ஆண்ட்ரியா, சார்லி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘மாஸ்க்’. டார்க் காமெடி த்ரில்லர் படமான இதை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார்.
தி ஷோ மஸ்ட் கோ ஆன் புரொடக்ஷன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளன. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நவ. 21-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, நெல்சன் என பலர் கலந்துகொண்டனர்.
விழாவில், விஜய் சேதுபதி பேசும்போது, “இந்தப்படத்தின் டிரெய்லர் பிடித்திருந்தது. @விடுதலை’ ஷீட்டிங்கில் இருந்தபோது இயக்குநர் வெற்றிமாறன் இந்தப்படத்தை ஆரம்பிப்பதாகச் சொன்னார்.
‘மாஸ்க்’ கதை உள்பட அதில் ஒவ்வொரு ஐடியாவும் நன்றாக இருந்தது. வெற்றி மாறன் மாஸ்கே இல்லாத, எல்லோரையும் சமமாக நடத்தும் மனிதர். கவின், திரையில் வசீகரமாக இருக்கிறார். அவரை திரையில் பார்க்கப் பிடித்திருக்கிறது.
இன்று வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுப்பதில் மேலே கீழே போகலாம். ஆனால், இது தான் பயிற்சி. சின்ன வயதில் பீச்சில், சிலையை பார்த்தேன், அப்புறம் ஆண்ட்ரியாவைப் பார்த்தேன்.
இன்னும் அதே அழகுடன் அப்படியே இருக்கிறார். இதற்கு முன் நரசுஸ் காபி விளம்பரத்தில் பார்த்தது போலவே இருக்கிறீர்கள். இப்போதும் அப்படியே இருக்கிறீர்கள்” என்றார். இதைக் கேட்டதும் ஆண்ட்ரியா சிரித்தார்.