தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டட பணிக்காக ரூபாய் ஒரு கோடி நிதியாக வழங்கிய கமல் ஹாசன்!!

தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக ₹1 கோடி வழங்கினார் நடிகர் கமல்ஹாசன். தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டடம் கட்டும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இக்கட்டத்தை கட்டும் பணி நடந்து வரும் நிலையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கட்டடத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக வங்கியில் 40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல் ஹாசன் கட்டட பணிக்காக ரூபாய் ஒரு கோடியை நிதியாக வழங்கியுள்ளார் . சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் ,பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன் ஆகியோரை சந்தித்து காசோலையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூபாய் ஒரு கோடியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *