ஐயப்பனின் சின் முத்திரை உணர்த்தும் தத்துவம்!!

சபரிமலையில் ஆனந்த சொரூபன் ஐயப்பன் அமர்ந்து தரிசனம் தரும் நிலை வித்தியாசமானது. இது ஆசன ரூபம் எனப்படுகிறது. அதாவது யோகபாதாசனம் அல்லது யோக சித்தாசனம் என்றும் கூறலாம்.


சுவாமி ஐயப்பன் தபசினைக் காண்பிப்பதாக பூரணதபோவர தியான ரூபத்தில் இருக்கிறார். (மூல விக்ரகத்தில் கண் சற்றே திறந்த தியான ரூபத்தில் சிலை உள்ளது). ஐயப்பனின் கால்களை சுற்றியுள்ள வஸ்திரத்திற்கு வஸ்திரபந்தம் அல்லது யோக பட்டம் என்று பெயர்.

ஐயப்பனின் வலது திருக்கரம் சின் முத்திரை என்ற ஞானமுத்திரை காட்டி பக்தர்களை ஆசீர்வதிக்கிறது. இந்த முறையில் மூன்று விரல் நீட்டியும், ஆள்காட்டி விரல் மடக்கி கட்டை விரலோடு சேர்கிறது.

இதன் பொருள் ஆணவம், கண்மம், மாயை ஆகியவற்றை எவனொருவன் விட்டுவிட்டு தெய்வ சன்னதியை அடைகிறானோ, அவனுடைய ஜீவாத்மாவானது பரமாத்மாவை வந்து அடைகிறது என்று அர்த்தம்.

ஐயப்ப சுவாமியின் மூன்று நீட்டிய விரல்கள் ஆணவம், கன்மம், மாயையையும், ஆள்காட்டி விரல் ஜீவாத்மாவையும், கட்டை விரல் பரமாத்வாவையும் குறிக்கிறது. இதுதவிர மூன்று விரல்களை சத், சித் ஆனந்தம் (சச்சிதானந்தம்) என்றும் கூறுவர்.

அதாவது “நான் சத்தியமும் ஆனந்தமும் ஆவேன். நான் என்னுடைய தெய்வீக ஆனந்தத்தில் தினமும் லயித்துக் கொண்டு இருக்கிறேன்.

என்னை தரிசிக்க வருபவருக்கு அவருடைய சகல துன்பங்களில் இருந்தும் மோட்சம் தரும் ஆத்ம ஞானத்தையும், மூன்று காலங்களிலும் சுகம், ஐஸ்வர்யம், சாந்தி இவை எல்லாம் கொடுத்து அருள்கிறேன்” என்று அய்யப்பன் சின்முத்திரை காட்டி அருள்பாலிக்கிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *