டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் எங்கு இருந்தாலும் தேடிப்பிடித்து வேட்டையாடுவோம் – அமித் ஷா உறுதி

ஹரியானா ;

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் வடக்கு மண்டல கவுன்சிலின் 32வது கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பயங்கரவாதத்தை அதன் வேர்களில் இருந்தே அழிப்பதுதான் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் நிலைப்பாடு எனக் கூறினார்.

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் பாதாள உலகத்தில் இருந்தாலும் வேட்டையாடுவோம் எனவும் சூளுரைத்தார்.

மேலும் இந்தியாவில் இது போன்ற தாக்குதலை நடத்த யாரும் நினைத்துப் பார்க்கவும் துணிய கூடாது என்ற அளவிற்கு உலகிற்கு ஒரு செய்தியை அனுப்புவோம் எனவும் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *