மேட்​டூர் அணைக்கு விநாடிக்கு 5,841 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 6,367 கனஅடி​யாக அதிகரிப்பு!!

மேட்​டூர் / தரு​மபுரி:
மேட்​டூர் அணைக்கு விநாடிக்கு 5,841 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 6,367 கனஅடி​யாக அதி​கரித்​தது.

அணை​யில் இருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 1,000 கன அடி​யும், கால்​வாய் பாசனத்​துக்கு 400 கனஅடி​யும் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

நீர் வரத்தை காட்​டிலும், தண்​ணீர் வெளி​யேற்​றம் குறை​வாக இருப்​ப​தால் அணை​யின் நீர்​மட்​டம் உயர்ந்து வரு​கிறது.

தற்​போது அணை​யின் நீர்​மட்​டம் 112.33 அடியி​லிருந்து 112.61 அடி​யாக​வும், நீர் இருப்பு 81.76 டிஎம்​சியி​லிருந்து 82.17 டிஎம்​சி​யாக​வும் உயர்ந்​துள்​ளது.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் கடந்த 2-ம் தேதி இரவு முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து 19 நாட்​களாக அளவில் மாற்​றமின்றி விநாடிக்கு 6,500 கனஅடி​யாகவே நீர்​வரத்து நீடிக்​கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *