சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கைத்தறி மூலம் தயாரிக்கப்படும் போர்வை உலக அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
கைத்தறி மூலம் பல்வேறு வடிவமைப்புடன் கூடிய போர்வைகள் தயாரிக்கப்படுகிறது.
கைத்தறி மூலம் காந்தி, கிரிக்கெட் வீரர் டோனி மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை போர்வையில் நெய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னிமலையின் பாரம்பரியத்தின் அடையாளமான கைத்தறி போர்வையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம், மேஜர் முகுந்த் வரதராஜனின் படமும் இணைந்து கைத்தறி நெசவாளர் அப்புசாமி என்பவரால் நெய்யப்பட்டது.
இந்த போர்வையை சென்னிமலை ஒன்றிய தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் சார்பிலும், நெசவாளர்கள் அப்புசாமி இணைந்து நடிகர் சிவகார்த்தி கேயனை நேரில் சந்தித்து கைத்தறி போர்வையை பரிசாக வழங்கினர்.