சென்னை:
தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
விக்னேஷ் ராஜா படத்தை முடித்துவிட்டு, ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் தனுஷ்.
கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பரில் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. அவரது முந்திய வெற்றி படமான ‘அமரன்’ படத்தில் நாயகியாக நடித்து பெரும் பெயரைப் பெற்றார் சாய் பல்லவி.
அவரது அடுத்தப் படத்திலும் நடிக்க வைக்க ராஜ்குமார் பெரியசாமி முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் – சாய் பல்லவி ஜோடி இணைந்து ‘மாரி 2’ படத்தில் பணிபுரிந்துள்ளது. இவர்கள் இணைந்து நடனமாடிய ‘ரவுடி பேபி’ பாடல் இப்போதும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் படத்துக்குப் பிறகு தனுஷ் – சாய் பல்லவி ஜோடி இணைந்து நடிக்கும் படமாக இது அமையும் என தெரிகிறது.