தனது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன்!!

இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘போடா போடி’ படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார்.

இப்படம் மாபெரும் வெற்றியை கண்டது இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ். நானும் ரவுடி தான் திரைப்பட படப்பிடிப்பு பணிகளில் விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. நயன்தாரா சமீப காலமாக படத்தில் நடித்து கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்ட நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி இந்த புகைப்படங்கள் அனைத்தையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர்.

அதில் இரண்டு குழந்தைகளுடன் படகில் போவது, அவரது மகன்கள் இருவரும் ட்ரவுசர்கள் அணிந்து மிகவும் க்யூட்டாக இருக்கின்றனர். மேலும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் அதில் நயன் தாராவை தூக்கி விலையாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அப்பதிவில் வெட்டிங் ஆனிவர்சரி வாழ்த்து தெரிவித்து

‘உன்னை திருமணம் செய்து கொண்டது என் வாழ்வில் நடந்த சிறந்த விஷயம் என் உயிர் உலகம் நீயே. லவ் யூ லாட்ஸ் என் தங்கமே. இன்னும் நிறைய வேடிக்கையான நேரங்கள், நினைவுகள் மற்றும் வெற்றிகரமான தருணங்களுக்கு நீண்ட தூரம் உன்னுடன் செல்ல வேண்டும். . எப்பொழுதும் எங்களுடன் நின்று நம்மைப் பாதுகாத்து, நமது பெரிய பெரிய லட்சியங்களை வெற்றிகொள்ளச் செய்ய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நமது உயிர் & உலகம் உடன்.” என்று பதிவிட்டுள்ளார்.

சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நயன்தாரா நடித்து வருகிறார். அடுத்து மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 , டெஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *