அனைத்து மாவட்டங்​களி​லும் சனாதன தர்​மத்தை வளர்க்​க​வும், பரப்​ப​வும் ஒருங்​கிணைப்​பாளர்​களை நியமிக்க பிஎஸ்​ஆர்​டிசி முடிவு!!

பாட்னா:
பிஹாரில் 2,499 கோயில்​கள் மற்​றும் மடங்​கள் உள்​ளன. இதன் பணி​களை மாநில மத அறக்​கட்​டளை கவுன்​சில் (பிஎஸ்​ஆர்​டிசி) மேற்​பார்​வை​யிட்டு வரு​கிறது.

சனாதன தர்​மத்தை வளர்க்க 38 மாவட்​டங்​களி​லும் ஒருங்​கிணைப்​பாளர்​களை நியமிக்க மாநில அரசு முடிவு செய்​துள்​ளது. இவர்​கள் கோயில் மற்​றும் மடங்​களின் தலைமை குருக்​களு​டன் ஒருங்​கிணைந்து செயல்​படு​வர்.

இதுகுறித்து பிஎஸ்​ஆர்​டிசி தலை​வர் ரன்​பிர் நந்​தன் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: அனைத்து மாவட்டங்​களி​லும் சனாதன தர்​மத்தை வளர்க்​க​வும், பரப்​ப​வும் ஒருங்​கிணைப்​பாளர்​களை நியமிக்க பிஎஸ்​ஆர்​டிசி முடிவு செய்​துள்​ளது.

கோயில்​கள் மற்​றும் மடங்​களின் தலைமை குருக்​கள்​தான் ஒருங்​கிணைப்​பாளர்​களாக தேர்வு செய்​யப்​படு​வர். அனைத்து கோயில்​கள் மற்​றும் மடங்​களில் சத்​ய​நாரயண கதா மற்​றும் பவுர்​ணமி நாளில் பகவதி பூஜா நடை​பெறு​வதை அவர்​கள் உறுதி செய்​வர்.

இந்த பூஜைகளின் முக்​கி​யத்​து​வம் குறித்து பக்​தர்​களிடம் எடுத்​துரைப்​பதை ஒருங்​கிணைப்​பாளர்​கள் உறுதி செய்​வர். இந்த பூஜைகளை மக்​களும், தங்​களது வீடு​களில் ஒவ்​வொரு மாத​மும் செய்ய ஊக்​குவிக்​கப்பட வேண்​டும்.

சமூகப் பணி​களை​யும் கோயில்​கள் மற்​றும் மடங்​கள் மேற்​கொள்ள வேண்​டும். நமது பண்​டிகைகள், பூஜைகள் மற்​றும் அவற்​றின் மதிப்​பு​களை​யும், சனாதன தர்​மத்​தை​யும் பரப்​புவது முக்​கி​யம். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *