சென்னை,
ராம் பொதினேனியின் ’ஆந்திரா கிங் தாலுகா’, தற்போது தெலுங்கில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்தப் படம் வருகிற 27-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், ஆந்திரா கிங் தாலுகாவின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய ராம் பொதினேனி, ஆந்திரா கிங் தாலுகாவை “தனது கெரியரில் பெருமைமிக்க படம்” என்று கூறினார்.
இதில் உபேந்திரா மற்றும் இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பாடல்கள், போஸ்டர்கள், டீசர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன.