பொதுவாக நாம் அடிக்கடி சமைக்கும் கத்தரிக்காயில் நிக்கோட்டின் என்ற நச்சுப் பொருள் அதிகம் இருக்கிறது .
அதனால் கத்தரிக்காய் ஒரு சிலருக்கு அசௌகரித்தையும் அலர்ஜியையும் கொடுத்து விடும்.
எந்த பிரச்சினையுள்ளவர்கள் கத்தரிக்காயை சாப்பிடவே கூடாது என்று இந்த பதிவில் பார்ப்போம் –
- பொதுவாக கத்தரிக்காய் சாப்பிட்டவுடன் சிலருக்கு உடலில் அரிப்பு, மற்றும் உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டு பல்வேறு தொல்லைகளை கொடுக்கும்
- இன்னும் சிலருக்கோ கத்தரிக்காய் சாப்பிட்டவுடன் நுரையீரலில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு ,அதிகம் அவஸ்த்தை படுவதுண்டு
- மேலும் கத்தரிக்காயில் ஆக்சலேட்டுக்கள் அதிகம் இருக்கிறது . இது தெரியாமல் கத்தரிக்காயை சிலர் சாப்பிட்டால் அதை ஜீரணிக்க கடினமாக இருந்து நிறைய தொல்லை கொடுக்கும்.
- மேலும் இன்னும் சிலருக்கு கத்தரிக்காயை அதிகம் சாப்பிட்டால் சிறுநீரக கற்களை உருவாக்கி ,அதனால் வயிறு வலி முதல் பல்வேறு தொல்லைகளை உருவாக்கி விடும்.
- ஏதாவது ஒரு நோய்க்கு மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுபவர்கள் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது. அப்படி மீறி சாப்பிட்டால் உடலில் பல்வேறு தொல்லைகள் உண்டாகும்.
- மேலும் சிலர் அதிகமாக கத்தரிக்காயை சாப்பிட்டால், அது நம்முடைய இரத்தத்தை மெல்லிதாக மாற்றி,அதனால் பல்வேறு ஆரோக்கிய கேடு உண்டாகும்.
- மேலும் சிலருக்கு அதிகப்படியான கத்தரிக்காயை சாப்பிட்டால் இரத்தப்போக்கை ஏற்படுத்தி,அதிக தொல்லை கொடுக்கும்.
- மேலும் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் கத்தரிக்காயை குறைவாக எடுத்துக் கொள்வது அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நல்லது .