இதயம், சிறுநீரகத்தை பாதுகாக்க உதவும் தர்பூசணி!!

தர்பூசணியில் இருக்கும் சிட்ரூலின் அமினோ அமிலம், ஒழுங்கில்லாத ரத்த நாளங்களை ஒழுங்குபடுத்தி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

நல்ல கண் பார்வை

தர்பூசணியில் பீட்டா கரோட்டீன், லீட்டின் மற்றும் வைட்டமின்-சி போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால், விரைவில் வயதாகும் தோற்றத்தை வரவிடாமல் தடுத்து, கண் ஆரோக்கியத்தை மெருகூட்டுகிறது.

தசை வலி போக்கும்

விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக்கூடிய தசை வலிகளுக்கு, தர்பூசணி ஜூஸ் சிறந்த நிவாரணி. விளையாட்டு பயிற்சி, உடற்பயிற்சி, ஓட்டம் மற்றும் நடைப்பயிற்சி ‘மேற்கொள்பவர்கள், தர்பூசணி ஜூஸ் குடிப்பது நல்லது.

சிறுநீரக ஆரோக்கியம்

தர்பூசணியில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், சிறுநீரகத்தை பாதிக்கும் அம்சங்களை விலக்கி, சிறுநீரகத்தில் கல் பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இதய நலன்

லைக்கோபென், சிட்ரூலின் போன்றவை தர்பூசணியில் நிறைந்திருப்பதால், இதய நலன் காக்கப்படுகிறது. இதயம் தொடர்பான நோய் பாதிப்புகள் குறைகின்றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *