தனது நிச்​சய​தார்த்த வீடியோக்​கள், ரீல்​ஸ்​களை இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் இருந்து திடீரென நீக்கிய ஸ்மிருதி மந்​த​னா!! தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் திருமணம் நிறுத்தம்…..

மும்பை:
இந்​திய கிரிக்​கெட் மகளிர் அணி​யின் துணை கேப்​டன் ஸ்மிருதி மந்​த​னா​வின் தந்​தையைத் தொடர்ந்​து, அவரது காதலரும் உடல்​நலக் குறை​வால் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்​பட்​டார்.

இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தொடக்க வீராங்​க​னை​யான 29 வயதான ஸ்மிருதி மந்​தனா பிரபல ஹிந்தி இசையமைப்​பாள​ரான மத்​திய பிரதேசத்​தைச் சேர்ந்த பலாஷ் முச்​சலை நீண்ட கால​மாக காதலித்து வந்​தார்.

இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி சமீபத்​தில் ஐசிசி உலகக் கோப்​பையை வென்ற நிலை​யில் பலாஷ் முச்சலுடன் மோதிரம் மாற்றி நிச்​ச​யம் செய்​து​கொண்​டதை வீடியோ​வாக வெளி​யிட்டு அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்திருந்தார் ஸ்மிருதி மந்​த​னா.

இவர்​கள் இரு​வருக்​கும் நேற்று முன்​தினம் மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள சாங்​கிலி மாவட்​டத்​தில் திரு​மணம் நடை​பெறு​வ​தாக இருந்​தது. சாங்​லி​யின் சாம்​டோலில் உள்ள மந்​த​னா​வின் பண்ணை வீட்​டில் திருமண ஏற்​பாடு​கள் நடந்து கொண்​டிருந்​தன.

அப்​போது திடீரென ஸ்மிருதி மந்​த​னா​வின் தந்தை னி​வாஸ் மந்​த​னா​வுக்கு மாரடைப்பு ஏற்​பட்​டது. அவர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்ட நிலை​யில், திரு​மணத்தை தள்ளிவைப்​ப​தாக குடும்​பத்​தினர் அறி​வித்​திருந்​தனர்.

இந்த நிலை​யில், உடல்​நலக் குறைவு காரண​மாக பலாஷ் முச்​சலும் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

உடல் சோர்வு காரண​மாக மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட பலாஷ் முச்​சல், சில மணி நேரங்​களில் வீடு திரும்​பி​னார். அதேவேளை​யில் ஸ்மிரு​தி​யின் தந்​தைக்கு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. அவரை மருத்​து​வர்​கள் தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் ஸ்மிருதி மந்​த​னா, தனது நிச்​சய​தார்த்த வீடியோக்​கள், ரீல்​ஸ்​களை இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் இருந்து திடீரென நீக்கி உள்​ளார். இந்த வீடியோக்​களை பகிர்ந்​திருந்த இந்​திய அணி​யின் வீராங்​க​னை​களான ஜெமிமா ரோட்​ரிக்​ஸ், ஸ்ரே​யங்கா பாட்​டீல் ஆகியோ​ரும் நீக்கி உள்​ளனர்.

அதேவேளை​யில் பலாஷ் முச்​சலுடன் எடுத்​துக்​கொண்ட மற்ற படங்​களை ஸ்மிருதி மந்​த​னா நீக்கம்​ செய்​ய​வில்​லை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *