இங்கிலாந்து வெற்றிக்கு 35 ரன்களே தேவை!!

சென்னை:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்னும் , இங்கிலாந்து 247 ரன்னும் எடுத்தன.

23 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சில் 396 ரன் குவித்தது. இதனால் இங்கிலாந்துக்கு 374 ரன் இலக்காக இருந்தது. 374 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை விளை யாடியது.

நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் எடுத்து இருந்தது.

ஹேரி புரூக் ( 111), ஜோ ரூட் (105) ஆகியோர் சதம் அடித்தனர். டக்கெட் 54 ரன் எடுத்தார். ஜேமி சுமித் 2 ரன்னுடனும் , ஓவர்டன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட் டும், ஆகாஷ் தீப் 1 விக்கெட் டும் கைப்பற்றினார்கள்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து வெற்றிக்கு மேலும் 35 ரன்னே தேவை. கைவசம் 4 விக்கெட் உள்ளது.


எஞ்சிய 4 விக்கெட்டை வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெறும். இந்திய பந்துவீச்சாளர்கள் சாதிப்பார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

80-வது ஓவருக்கு பிறகு இந்திய அணி புதிய பந்தை எடுக்கும். அதற்கு முன்பு இங்கிலாந்து 35 ரன்னை எடுக்க முயற்சிக்கும்.

அந்த அணி 76.2 ஓவர்கள் ஆடியுள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வரவில்லை. மேலும் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடிய போது பந்தும் வீசவில்லை.

2-வது இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்ய வருவது சந்தேகம் என கருதப்பட்டது. ஆனால் கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்யலாம் என்று அந்த அணி வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும் போது, ‘தேவைப் பட்டால் கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்ய தயார். அவரால் பேட்டிங் செய்ய முடியும்’ என்றார்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் இங்கிலாந்தின் 3 விக்கெட்டை 106 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினர். 4-வது விக்கெட்டான ஜோ ரூட்-ஹேரி புரூக் ஜோடி ரன்களை குவித்து ஆட்டத்தை மாற்றி விட்டது.


ஹேரி புரூக்கின் கேட்சை சிராஜ் தவற விட்டது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கேட்ச் பிடித்து விட்டு அவர் எல்லை கோட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
அப்போது புரூக் 19 ரன்னில் இருந்தார்.

இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.
இந்தியா வெற்றி பெற்றால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடியும். இங்கிலாந்து வென்றால் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *