சென்னை:
அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ள படத்துக்கு ‘சூப்பர் ஹீரோ’ என தலைப்பிட்டு டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
‘பார்க்கிங்’ படத்தை தயாரித்த சினிஷ் அடுத்ததாக தயாரிக்கவுள்ள படங்கள் குறித்த அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ள அடுத்த படத்தை சினிஷ் தயாரிக்கவுள்ளார். இப்படத்துக்கு ‘சூப்பர் ஹீரோ’ எனத் தலைப்பிடப்பட்டு டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
இந்த டைட்டில் லுக்கின் மூலம், இப்படம் சூப்பர் ஹீரோ தொடர்பான கதை என்பது முடிவாகிறது. இதில் வில்லனாக சாண்டி, நாயகியாக தேஜு அஸ்வினி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் இயக்கவுள்ளார். இசையமைப்பாளராக ஹேஷம் அப்துல் வஹாப், ஒளிப்பதிவாளராக சத்யா, எடிட்டராக லாரன்ஸ் கிஷோர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இப்படத்தை ஷன்ஜன் மற்றும் சினிஷ் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு மற்றும் இதர நடிகர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.