சென்னை ஒன் செயலி வாயி​லாக மின்​னணு மாதாந்​திர பயண அட்டை பெறும் வசதியை தொடங்கி வைத்​த அமைச்​சர் சிவசங்​கர் !!

சென்னை:
சென்னை ஒன் செயலி வாயி​லாக மின்​னணு மாதாந்​திர பயண அட்டை பெறும் வசதியை அமைச்​சர் சிவசங்​கர் தொடங்கி வைத்​தார்.

மாநகர் போக்​கு​வரத்​துக் கழகம் மற்​றும் கும்டா இணைந்து சென்னை ஒன் செயலி வாயி​லாக ரூ.1,000 (கோல்​டன் டிக்​கெட்) மற்​றும் ரூ.2,000 (டைமண்ட் டிக்​கெட்) மின்​னணு மாதாந்​திர பயண அட்டை பெறும் வசதி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

சென்னை பல்​ல​வன் சாலை​யில் உள்ள மாநகர போக்​கு​வரத்​துக் கழக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடந்த நிகழ்ச்​சி​யில் இந்த வசதியை பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்கு அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் அறி​முகம் செய்து வைத்​தார்.

தற்​போது, மாநகர் போக்​கு​வரத்​துக் கழக முக்​கிய பேருந்து நிலை​யங்​களில் மாதாந்​திர பயணச்​சீட்டு மையங்​கள் வாயி​லாக வழங்​கப்​பட்டு வரும் விருப்​பம்​போல் பயணம் செய்​யும் ரூ.1000 மற்​றும் ரூ.2000 மதிப்​பிலான பயண அட்​டைகள், சென்னை ஒன் செயலி வாயி​லாக எங்​கும் – எப்​போதும் கைபேசி​யில் எளி​தாக பெறக்​கூடிய மின்​னணு பயண அட்​டைகளாக மாற்​றப்​பட்​டுள்​ளன.

சென்னை ஒன் செயலி வாயி​லாக பெறப்​படும் இந்த மின்​னணு பயண அட்டை வாங்​கிய நாளி​லிருந்​து, தொடர்ந்து 30 நாட்​களுக்கு செல்​லுபடி​யாகும்.

மேலும், இது முழுக்க முழுக்க பணமில்லா பரிவர்த்​தனை முறை​யில் இயங்​கு​வ​தால் யுபிஐ அல்​லது டெபிட், கிரெடிட் கார்​டு​கள் மூலம் உடனடி​யாக கட்​ட​ணம் செலுத்​தி, பயண அட்டை பெறும் வசதி உள்​ளது என அதி​காரி​கள் கூறினர்.

இதை தொடர்ந்து நாட்​டிலேயே சிறந்த பொதுப் போக்​கு​வரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற தேசிய விருது பெற்​றதற்​காக மாநகர் போக்​கு​வரத்​துக் கழக அனைத்து பணி​யாளர்​களுக்​கும் அமைச்​சர் பாராட்​டுச் சான்​றிதழும், பதக்​க​மும் வழங்கி கவுர​வித்​தார்.

இந்த​நிகழ்ச்​சி​யில், மாநகர் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் த.பிரபுசங்​கர், சென்னை ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து அதி​கார அமைப்பு (கும்​டா) உறுப்​பினர் செயலர் ஐ.ஜெயக்​கு​மார், மாநகர் போக்​கு​வரத்​துக் கழக இணை மேலாண் இயக்​குநர் ராம.சுந்​தர​பாண்​டியன், உயர் அலு​வலர்​கள்​ மற்​றும்​ தொழிற்​சங்​க பிர​தி​நி​திகள் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *