விமானப் பராமரிப்பு துறை​யில் இந்​தியா சர்​வ​தேச அளவில் முன்​னிலை வகிக்​கும் – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!!

புதுடெல்லி:
நவம்​பர் மாதம் பல உத்​வேகங்​களை வழங்​கி​யுள்​ளது. விமானப் பராமரிப்பு துறை​யில் இந்​தியா சர்​வ​தேச அளவில் முன்​னிலை வகிக்​கும் என்று மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​தார்.

ஒவ்​வொரு மாத​மும் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்​சி​யின் மூல​மாக பிரதமர் நாட்டு மக்​களு​டன் உரை​யாற்றி வரு​கிறார். அந்த வகை​யில் நேற்று அவர் பேசி​ய​தாவது:

2025 நவம்​பர் மாதம் பல உத்​வேகங்​களை நம்​மிடம் கொண்டு சேர்த்​துள்​ளது. சில நாட்​களுக்கு முன்​பாகத்​தான் நவம்​பர் 26-ம் தேதி அரசி​யலமைப்பு சட்ட தினத்​தன்று நாடாளு​மன்ற மைய மண்​டபத்​தில் சிறப்பு நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டது.

வந்தே மாதரத்​தின் 150 ஆண்டு கொண்​டாட்​டங்​கள் மிகச்​சிறப்​பாக தொடங்​கப்​பட்​டன. நவம்​பர் 25-ம் தேதி​யன்று அயோத்தி ராமர் கோயி​லில் தர்​மக்​கொடி ஏற்​றப்​பட்​டது.

சில நாட்​களுக்கு முன்​பாக, ஹைத​ரா​பா​தில் உலகின் மிகப் பெரிய விமான என்​ஜின் எம்​.ஆர்​.ஓ. வசதியை தொடங்கி வைத்​தேன்.

விமானங்​களை பராமரித்​து, பழுது​பார்த்து செப்​பனிடும் துறை​யில் இந்​தியா சர்​வ​தேச அரங்​கில் முன்​னிலை வகிப்​ப​தற்கு இந்த திட்​டம் வழிகோலி​யுள்​ளது.

கடந்த வாரங்​களில் மும்​பை​யில் ஐ.என்​.எஸ். மாஹே கப்​பல் இந்​திய கடற்​படை​யில் இணைக்​கப்​பட்​டது மிகப்​பெரும் நிகழ்​வு.

357 மில்​லியன் டன் உணவு.. நமது தேசம் உணவு உற்​பத்​தி​யில் புதிய சாதனை படைத்​திருக்​கிறது. அதாவது 357 மில்லியன் டன் உணவுப் பொருட்​களை நம்​நாடு உற்​பத்தி செய்​துள்​ளது.

பத்​தாண்​டு​களுக்கு முன்​பான தரவு​களு​டன் ஒப்​பிடும்​போது உணவுப் பொருள் உற்​பத்தி 100 மில்​லியன் டன் அதி​கரித்து சிறப்​பான வரலாற்​றுப் பதிவை ஏற்​படுத்​தி​யிருக்​கிறது.

கடந்த வாரம் சமூக ஊடகங்​களில் வலம் வந்த ஒரு காணொலி என்னை மிக​வும் கவர்ந்​தது. இது இஸ்​ரோ​வின் வித்​தி​யாச​மான ட்ரோன் போட்டி தொடர்​பானது.

நமது தேசத்​தின் இளைஞர்​கள் அதி​லும் குறிப்​பாக, ஜென் ஸீயைச் சேர்ந்த இளைஞர்​கள் செவ்​வாய் கிரகம் போன்ற இடங்​களில் ட்ரோன்​களை இயக்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டனர்.

அங்கு ஜிபிஎஸ் வசதி சாத்​தி​யமில்லை என்​ப​தால் ட்ரோன்​களுக்கு வெளியி​லிருந்து எந்​த​வித சுட்​டு​தலோ, வழி​காட்​டு​தலோ கிடைக்​க​வில்​லை.

இதனை காணும்​போது என் மனதில் சந்​திர​யான்-2 நமது தொடர்​புக்கு அப்​பால் சென்​றது​தான் நினை​வுக்கு வந்​தது. விஞ்​ஞானிகள் சில மணி நேரங்​களுக்கு ஏமாற்​றத்​தின் மொத்த உரு​வ​மா​னார்​கள். ஆனால், தோல்வி அவர்​களை தடைப்​படுத்​த​வில்​லை. அதே​நாளன்​று, நமது விஞ்​ஞானிகள் சந்​திர​யான்-3 வெற்​றிக் கதையை எழுதத் தொடங்​கி​விட்​டார்​கள்.

தேனின் இனிமையை அனை​வரும் அறிவோம். ஜம்​மு-​காஷ்மீர் மலைப்​பகு​தி​யில் உள்ள சுலாயி எனப்​படும் வனத்​துளசி மலர்​களி​லிருந்து தேனீக்​கள் உலகின் மிகச் சிறந்த தேனை உரு​வாக்​கு​கின்​றன.

வெண்மை நிறம் கொண்ட இந்த சுலாயி தேனுக்கு புவி​சார் குறி​யீட்டு காப்​புரிமை கிடைத்​துள்​ளது.

11 ஆண்​டு​களுக்கு முன்​பாக இந்​தி​யா​வின் தேன் உற்​பத்தி 76 ஆயிரம் மெட்​ரிக் டன்​னாக இருந்த நிலை​யில், தற்​போது ஒன்​றரை லட்​சம் மெட்​ரிக் டன்​னாக அதி​கரித்​துள்​ளது.

2030-ல் காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டிகளை நடத்​து​வதற்​கான ஏலத்​தில் இந்​தி​யா வெற்​றி​பெற்​றுள்​ளது. இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசி​னார்​.

தமிழில் பேசிய பிரதமர் மோடி: மனதின் குரல் நிகழ்ச்சியின் இடையே தமிழில் பேசிய பிரதமர் மோடி தமிழ் மொழி, கலாச்சாரம் குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்க கோவை சென்றிருந்தேன். தென்பாரதத்தில் இயற்கை வேளாண்மை தொடர்பான முயற்சிகளை பார்க்கும்போது பிரமிப் படைந்தேன்.

பல இளைஞர்கள், தொழில்வல்லுநர்கள் இப்போது இயற்கை வேளாண்மையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழர்களுடன் பேசும்போது இயற்கை வேளாண்மை என்பது பாரதத்தின் பண்டைய பாரம்பரியங்களின் அங்கமாக இருந்துள்ளதை தெரிந்து கொண்டேன்.

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ், தொன்மையான நகரமான காசியில் சங்கமிப்பது மிகவும் அற்புதமானது. காசி தமிழ்ச் சங்கமத்தை பற்றிதான் பேசுகிறேன்.

டிசம்பர் 2-ல் காசியின் நமோ காட்டில், காசி தமிழ்ச் சங்கமத்தின் 4-ம் பதிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்த முறை காசி தமிழ் சங்கமத்தின் மையக்கரு மிகவும் சுவாரசியமானது. “தமிழ் கற்கலாம்” என்பதுதான் அது.

யாருக்கெல்லாம் தமிழ் மொழி மீது ஈடுபாடு இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் காசி தமிழ்ச் சங்கமம் மகத்துவம் வாய்ந்த மேடையாக மாறியுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து வரும் சகோதர சகோதரிகளை வரவேற்க இந்த முறையும் காசிவாசிகள் பெரும் உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் உள்ளனர். தமிழ் கலாச்சாரம் உயர்வானது. தமிழ் மொழி உயர்வானது. தமிழ் இந்தியாவின் பெருமிதம்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *