16 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு ஓடிய பயங்கரவாதியை வெறும் கைகளால் மடக்கிப் பிடித்த நபரை ஆஸ்திரேலிய பிரதமர் நேரில் பாராட்டு!!

சிட்னி,
16 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு ஓடிய பயங்கரவாதியை வெறும் கைகளால் மடக்கிப் பிடித்த நபரை அந்நாட்டு பிரதமர் பாராட்டியுள்ளார் ‘ஆஸ்திரேலியாவின் நாயகர்’ என்று அவரைப் புகழ்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். யூதர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது, பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை – மகன் என்பது தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவன் பின்னால் இருந்து ஒருவர் சாமர்த்தியமாக மடக்கி பிடித்தார்.

எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல் வெறும் கைகளால் அந்த பயங்கரவாதியை அடித்து உதைத்து அவனிடமிருந்த துப்பாக்கியையும் பறித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அவரது அசாத்திய தைரியத்தை பாராட்ட வைத்துள்ளது.

அவர் சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அல் அஹமது (வயது 40) என தெரியவந்துள்ளது. மேற்காசிய நாடான சிரியாவைச் சேர்ந்த அவரது குடும்பம் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

பயங்கரவாதி தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல்–அஹமதுவை நேரில் சென்று, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நலம் விசாரித்தார். இது தொடர்பாக, அவர் வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

‘‘அஹமது – நீங்கள் ஒரு ஆஸ்திரேலிய ஹீரோ. சிட்னி கடற்கரையில் மக்களை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பயங்கரவாதியிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கி சரணடைய வைத்த உங்களுக்கு ஒவ்வொரு ஆஸ்திரேலிய மக்களின் சார்பாகவும் நான் நன்றி கூறுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *