ஹஜ் புனிதப் பயணம் மேற்​கொள்​ளும் முஸ்​லிம்​கள் பயன்​பெறும் வகை​யில் சென்னை விமான நிலை​யம் அரு​கில் ‘தமிழ்நாடு ஹஜ் இல்லம்’ – முதல்வர் மு.க.ஸ்​டா​லின் அடிக்கல் நாட்டினார்!!

சென்னை:
ஹஜ் புனிதப் பயணம் மேற்​கொள்​ளும் முஸ்​லிம்​கள் பயன்​பெறும் வகை​யில் சென்னை விமான நிலை​யம் அரு​கில் ஓர் ஏக்​கரில், ரூ.39.20 கோடி​யில் கட்​டப்பட உள்ள தமிழ்​நாடு ஹஜ் இல்​லத்​துக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார்.

இது தொடர்​பாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: ஹஜ் புனிதப் பயணம் மேற்​கொள்​ளும் முஸ்​லிம்​களுக்​காக சென்னை விமான நிலை​யம் அரு​கில் தமிழ்​நாடு ஹஜ் இல்லம் கட்​டப்​படும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த மார்ச் 3-ல் நாகை​யில் நடை​பெற்ற அரசு விழா​வில் அறி​வித்​தார்.

ரூ.39.20 கோடியில்.. அதற்​கிணங்க, ஹஜ் புனிதப் பயணம் மேற்​கொள்​ளும் முஸ்​லிம்​கள் விமானம் புறப்​படு​வதற்கு ஒரு​நாள் முன்​னர் தமிழக ஹஜ் குழு அலு​வல​கத்தை அணுகி, பயண நடை​முறை​களை நிறைவேற்றி விமான நிலை​யத்​துக்கு செல்​வதற்கு ஏது​வாக, சென்னை அண்ணா பன்​னாட்டு விமான நிலை​யம் அரு​கில் ஓர் ஏக்​கர் பரப்​பில், ரூ.39.20 கோடி மதிப்​பில் கட்​டப்​பட​வுள்ள தமிழ்​நாடு ஹஜ் இல்​லம் கட்​டு​மானப் பணிக்கு முதல்​வர் ஸ்டா​லின் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார்.

இப்​பு​திய ஹஜ் இல்லம் அடித்​தளம் உட்பட 4 தளங்​களு​டன் கட்​டப்பட உள்​ளது. விழா​வில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள் தா.மோ.அன்​பரசன். எஸ்​. எம்​.​நாசர், மாநில ஹஜ் கமிட்​டித் தலை​வர் அப்​துல் சமது, நவாஸ் கனி எம்​.பி., ஐயுஎம்​எல் தலை​வர் கே.எம்​.​காதர்​மொய்​தீன், மமக தலை​வர் எம்​.எச்​.ஜ​வாஹிருல்லா, இ.கருணாநி​தி, எஸ்​.ஆர்​.​ராஜா உள்​ளிட்ட எம்​எல்​ஏக்​கள்​ பங்​கேற்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *