சென்னை, புறநகர் பகு​தி​களில் வசிக்​கும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வலி​யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் போராட்டம்: முதல்வர் ஸ்டாலினிடம் பெ.சண்முகம் வலியுறுத்தல்!!

சென்னை:
சென்னை, புறநகர் பகு​தி​களில் வசிக்​கும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வலி​யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் தமிழக அரசுக்கு மனு கொடுக்​கும் போராட்​டம் சிவானந்தா சாலை​யில் நேற்று நடை​பெற்​றது.

கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தலை​மை​யில் நடந்த போராட்​டத்​தில் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மக்​கள் பங்​கேற்​றனர்.

முன்​ன​தாக கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் உ.வாசுகி உள்​ளிட்​டோர் திமுக தலைமை அலு​வல​கத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை சந்​தித்து கோரிக்​கைகள் தொடர்​பாக மனுவை அளித்​து​விட்டு போராட்ட இடத்​துக்கு வந்​தனர்.

அப்​போது பெ.சண்​முகம் பேசி​ய​தாவது: தமிழகம் முழு​வதும் ஆட்​சே பணைக்​குரிய புறம்​போக்கு நிலங்​கள் என்று அரசால் வகைப்​படுத்​தப்​பட்​டிருக்​கும் நீர்​நிலை புறம்​போக்​கு, அனாதீனம் புறம்​போக்​கு, வாய்க்​கால் புறம்​போக்​கு, பாது​காப்பு துறை, ரயில்வே துறைக்கு சொந்​த​மான இடங்​கள், கோயில் இடங்​கள் போன்​றவற்​றில் பல லட்​சக்​கணக்​கான குடும்​பங்கள் பல தலை​முறை​களாக வாழ்ந்து வரு​கின்றன.

இந்​நிலை​யில் அவ்​வப்​போது நீதி​மன்ற உத்​தர​வு, அதி​காரி​களு​டைய ஆணை என்ற பெயரில் அவர்​களை அவர்​களின் குடி​யிருப்​பு​களில் இருந்து அப்​புறப்​படுத்​தும் நடவடிக்கை மிகப்​பெரிய பிரச்​சினை​யாக இருந்து வரு​கிறது. அதன் அடிப்​படை​யில் இந்த போராட்​டத்தை நடத்தினோம்.

இதன் விளை​வாக தமிழகம் முழு​வதும் உள்ள ஆட்​சேபணைக்​குரிய புறம்​போக்​கு​களை எல்​லாம் வகை மாற்​றம் செய்து பட்டா வழங்​கு​வதற்கு ஆலோ​சனை வழங்க உயர் அதி​காரி​கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்​கும் என்​றும், பட்டா பிரச்​சனைக்கு நிரந்​தர​மான தீர்வை ஏற்​படுத்​து​வோம் என்​றும் முதல்​வர் உறு​தி​யளித்​துள்​ளார் என்று அவர்​ கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *