இன்றைய பஞ்சாங்கம்!!

விசுவாவசு ஆண்டு மார்கழி-14 (திங்கட்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : தசமி பின்னிரவு 3.50 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 2.40 மணி வரை பிறகு பரணி

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் அபிஷேகம்

இன்று கெர்ப்போட்டம் ஆரம்பம். திருக்குற்றாலம் திருக்குற்றால நாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரதோற்சவம். சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பவனி.

வீரவநல்லூர் ஸ்ரீ சுவாமி ரிஷப வாகனத்திலும், இரவு ஸ்ரீசுவாமி இந்திர வாகனத்திலும் வீதி உலா. ஆவுடையார் கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் ஊர்துவத் தாண்டவக் காட்சி, இரவு யானை வாகனத்தில் பவனி.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதியில் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கும், நத்தம் ஸ்ரீவிஜயாசனப் பெருமாளுக்கும், கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக்கும் திருமஞ்சனம்.

திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ அராளகேசி அம்மன் சமேத ஸ்ரீரத்தின கிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை சமேத ஸ்ரீமகாலிங்க சுவாமி கோவில்களில் சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு பாலாபிஷேகம். திருச்சேறை ஸ்ரீசாரநாதர் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஊக்கம்

ரிஷபம்-அமைதி

மிதுனம்-ஈகை

கடகம்-ஓய்வு

சிம்மம்-லாபம்

கன்னி-ஜெயம்

துலாம்- திடம்

விருச்சிகம்-மாற்றம்

தனுசு- போட்டி

மகரம்-வரவு

கும்பம்-ஆசை

மீனம்-உறுதி

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *