ஆந்திரா
ஆந்திரா-ஒடிசா எல்லையில் போண்டக்கட்டி, ஆந்திரா ஹால் என்ற பழங்குடியினர் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக வினோத திருவிழாவை நடத்தி வருகிறார்கள். வாலிபர்கள் ஒருவரை, ஒருவர் தாக்கிக்கொள்ளும் திருவிழா நடைபெற்று வருகிறது.
அதன்படி கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் மரக்கட்டைகளை வெட்டி 4 நாட்கள் மாட்டு சாணத்தில் ஊற வைத்தனர்.
நேற்று மலை கிராமத்தில் திருவிழா நடந்தது. சாணத்தில் ஊற வைத்த கட்டையை எடுத்து வந்து வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது சிரித்தபடியே அடித்தனர்.
இந்த சம்பவத்தை ஊர் மக்கள் ஒன்று கூடி வேடிக்கை பார்த்தனர். உடலில் காயம் அடைந்த வாலிபர்களுக்கு அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் மஞ்சள் அரைத்து காயம்பட்ட இடத்தில் பூசிவிட்டனர்.
காயம் அடைந்த வாலிபரை அவரை தாக்கிய வாலிபர் கட்டிப்பிடித்து கை குலுக்கினர். இதனால் வாலிபர்கள் இடையே சகோதரத்துவம் அதிகரிக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.