மத்​திய தொழில் பாது​காப்பு படை​யில் தமிழர்கள் அதிக அளவில் பணிக்கு சேர வேண்​டும் – அழைப்பு விடுத்​த தென் மண்டல ஐ.ஜி. சரவணன்!!

சென்னை:
மத்​திய தொழில் பாது​காப்பு படை​யில் தமிழர்கள் அதிக அளவில் பணிக்கு சேர வேண்​டும் என்று தென் மண்டல ஐ.ஜி. சரவணன் அழைப்பு விடுத்​துள்​ளார்.

போதைப் பொருள், ஆயுதங்​கள், வெடிபொருட்​கள் கடத்​தல், குறித்த விழிப்​புணர்வு மற்​றும் தேசப்​பற்றை மக்​களிடம் அதி​கரிக்​கும் வித​மாக நாடு முழு​வதும் உள்ள கடலோர கிராமங்​களில் மத்​திய தொழில் பாது​காப்பு படை​யினர் (சிஐஎஸ்​எப்) சைக்​கிள் பயணம் மேற்​கொள்ள உள்​ளனர்.

இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் சிஐஎஸ்​எப் தென் மண்டல ஐ.ஜி. எஸ்​.ஆர்​.சர​வணன், சென்னை விமான நிலைய டிஐஜி பொன்னி ஆகியோர் கூறிய​தாவது: சிஐஎஸ்​எப் படை​யினரின் ‘சைக்​ளோ​தான்​-2026’ நிகழ்​வை, டெல்​லி​யில் மத்​திய உள்​துறை இணை அமைச்​சர் நித்​யானந்த் ராய் ஜன.28-ம் தேதி தொடங்கி வைக்​கிறார்.

இந்த பயணம் 25 நாட்​கள் கொண்​டது. 65 பெண்​கள், 65 ஆண்​கள் என 130 பேர் பங்​கேற்​கின்​றனர். அதில் 11 பேர் தமிழர்கள்.

குஜ​ராத்​தின் லக்​பத் கோட்​டை, மேற்கு வங்​கத்​தின் பக்​காலி​யில் இருந்து ஒரே நேரத்​தில் 2 சைக்​கிள் குழு​வினர் புறப்​பட்டு பிப்​.22-ம் தேதி கொச்​சி​யில் பயணத்தை நிறைவு செய்கின்​றனர்.

சிஐஎஸ்​எப் படை​யில் புதி​தாக 14 ஆயிரம் பேரை பணிக்கு எடுக்​கிறோம். சென்னை போன்ற விமான நிலை​யங்​களில் பாது​காப்பு பணிக்கு வீரர்​களை நியமிக்​கும்​போது, 30% பேர் அந்​தந்த மாநிலத்​தவர், 30% பேர் அண்டை மாநிலத்​தவர், மற்ற 40% பேர் வடமாநிலத்​தவர் என இருப்​பார்​கள்.

ஆனால், இங்கு தமிழக வீரர்​கள் 30% பேர் பணி​யில் இருப்​ப​தில்லை என்ற விமர்​சனம் எழுகிறது. சிஐஎஸ்​எப் படை​யில் தமிழர்கள் அதிக அளவு சேராதது ​தான் இதற்கு காரணம். தமிழர்கள் அதிக அளவில் சிஐஎஸ்​எப் படையில் சேர வேண்​டும் என்றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *