ஜகார்த்தா:
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் லின் ஹோஜ்மார்க் கஜேர்ஃபெல்ட்டை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சர்வதேச பாட்மிண்டன் போட்டிகளில் பி.வி.சிந்துவின் 500-வது வெற்றியாக இது அமைந்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் ஹாங் காங்கின் ஜேசன் குணவனை தோற்கடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்தார்.
மற்றொரு இந்திய வீரரான கிடாம்பி காந்த் 11-21, 10-21 என்ற நேர் செட் கணக்கில் 4-ம் நிலை வீரரான சீன தைபேவின் சோ டியன் சென்னிடம் தோல்வி அடைந்தார்.