புதுடெல்லி:
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 78-வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
டெல்லி, ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோரும் தேசத் தந்தைக்கு அஞ்சலி செலுத்தினர்.
காந்தியின் நினைவாக தலைவர்கள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் அனைத்து மத பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.