நாக்பூர்:
மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாநகராட்சி மேயராக பாஜகவின் சாரதா கேட்கரும், துணை மேயராக அமோல் கோகேவும் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.
பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸின் இருஅணிகளும் இணைந்த ஆதரவுடன் இவர்கள் வெற்றிபெற்றதாக மாநகராட்சி ஆணையர் சுனில் லஹானே தெரிவித்தார்.
80 உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சியில், மேயர் பதவிக்குப் போட்டியிட்ட சாரதா 45 வாக்குகளை பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட சிவசேனா (யுபிடி) வேட்பாளர் சுரேகா 32 வாக்கு கள் மட்டுமே பெற்றார்.