22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,520 குறைந்தது: இன்றைய சந்தை நிலவரம்!!

சென்னை:
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.12) காலை வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.1,520 குறைந்தது. வெள்ளி விலை இன்று மாற்றமின்றி சந்தையில் விற்பனை ஆகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் நேற்றைய தினம் (பிப்.11) காலை, மாலை ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்தது. நேற்று காலையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160-ம், மாலையில் பவுனுக்கு ரூ.1,520-ம் உயர்ந்தது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.1,18,320-க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று (பிப்.12) காலை சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,600-க்கு விற்​பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,16,800-க்கு விற்பனை ஆகிறது.

இதேபோல 24 காரட் சுத்த தங்​கம் பவுனுக்கு ரூ.1,656 என குறைந்து, ஒரு பவுன் ரூ.1,27,424-க்கு விற்பனை ஆகிறது. 18 காரட் தங்​கம் பவுனுக்கு ரூ.800 என குறைந்து, ஒரு பவுன் ரூ.1,00,800-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை இன்று மாற்றமின்றி சந்தையில் விற்பனை ஆகிறது. வெள்ளி ஒரு கிரா​ம் ரூ.300-க்​கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.3,00,000-க்​கும் சந்தையில் விற்பனை ஆகிறது. பிளாட்டினம் விலை கிராமுக்கு ரூ.51 என விலை குறைந்து ஒரு கிராம் ரூ.6,173-க்கு விற்பனையாகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *