வாழ்​வா​தார இயக்க பணி​யாளர்​களின் போராட்​டத்​துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கைதாகி விடுதலை!!

சென்னை:
ஊரக மற்​றும் நகர்ப்​புற வாழ்​வா​தார இயக்க பணி​யாளர்​களின் போராட்​டத்​துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானை போலீ​ஸார் கைது செய்​தனர்.

ஊதிய உயர்வு, பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்கைகளை வலி​யுறுத்தி தமிழ்​நாடு மாநில ஊரக மற்​றும் நகர்ப்​புற வாழ்​வா​தார இயக்க அனைத்து பணி​யாளர்​கள் நலச் சங்​கத்​தினர், 10-வது நாளாக தொடர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அதன்​படி வள்​ளுவர் கோட்​டம் அருகே நேற்று போராட்டம் நடை​பெற்றது.

அனுமதி மறுப்பு: இந்​நிலை​யில் இப்​போ​ராட்​டத்​துக்கு ஆதரவு தெரிவிக்க நாம் தமிழர் கட்சி ஒருங்​கிணைப்​பாளர் சீமான் அங்கு சென்றார். அப்போது அவரை காவல்​துறையினர் தடுத்து நிறுத்​தினர்.

‘இவர்​கள்அனு​ம​தி​யின்றி போராட்​டம் நடத்தி வரு​வதால் கைது செய்ய உள்​ளோம். எனவே நீங்​கள் இங்கிருந்து செல்ல வேண்டும்” என சீமானிடம் போலீ​ஸார் கூறினர்.

இதனால், காவல்​துறை​யினருடன் சீமான் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார். மேலும், என்​னை​யும் இவர்​களு​டன் கைது செய்​யுங்கள் எனக் கூறி​னார். இதையடுத்து போலீ​ஸார் சீமானை கைது செய்​தனர்.

விடுதலை செய்த போலீஸார்: பின்​னர் சில நிமிடங்​கள் கழித்து சீமானை விடுதலை செய்த போலீஸார், போராட்​டம் நடை​பெற்ற இடத்​தில் அவரை இறக்கி விட்​டனர். பின்​னர் அங்​கிருந்து தனது காரில் சீமான் புறப்​பட்​டுச் சென்​றார்.

இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், “போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள மக்​களை சந்​திக்​கக்​கூட அனு​மதி இல்​லை​யா?” என கேள்வி எழுப்​பி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *