விஜய் பற்றிய கேள்விக்கு எவ்வித ரியாக்ஷனும் காட்டாமல் மௌனமாக விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை பகுதிக்குள் விரைந்து சென்ற திரிஷா!!

“தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா, இன்று காலை சென்னையிலிருந்து மும்பைக்குப் பயணம் மேற்கொண்டார்.”

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் திரிஷா மற்றும் விஜய் தொடர்பான விவாதங்கள் அனல் பறந்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்காமல் அவர் மௌனம் காத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 11:40 மணியளவில் சென்னையில் இருந்து மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் பயணம் செய்வதற்காக நடிகை திரிஷா சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தடைந்தார்.

வழக்கமாக விமான நிலையம் வரும்போது புன்னகையுடனும், ரசிகர்களுடன் செல்பி எடுத்தும் உற்சாகமாகக் காணப்படும் திரிஷா, இன்று மிகவும் அமைதியான தோற்றத்தில் காணப்பட்டார்.

திரிஷா விமான நிலையம் வந்த தகவலறிந்த செய்தியாளர்கள், அங்கு திரண்டு அவரிடம் சில கேள்விகளைக் கேட்க முயன்றனர்.

குறிப்பாக, சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் அவர் ஒரே நிறத்திலான ஆடை அணிந்து பொதுவெளியில் தோன்றியது குறித்த சர்ச்சைகள் மற்றும் கிசுகிசுக்கள் குறித்து விளக்கம் பெற முற்பட்டனர்.

இருப்பினும், செய்தியாளர்களின் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காத திரிஷா, எவ்வித ரியாக்ஷனும் காட்டாமல் மௌனமாக விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை பகுதிக்குள் விரைந்து சென்றார்.

அவரின் இந்தத் திடீர் மௌனம் அங்கிருந்தவர்களிடையே பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாகவே இணையதளங்களில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா தொடர்பான செய்திகள் வைரலாகி வருகின்றன.

இருவரும் தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ ஒரே நிறத்தில் ஆடை அணிந்து வந்தது, பல்வேறு விதமான விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுத்தது.

இத்தகைய சூழலில், பொதுவெளியில் இது குறித்த கேள்விகளை எதிர்கொள்ள விரும்பாமல் திரிஷா தவிர்த்திருக்கலாம் எனத் தெரிகிறது.

எது எப்படியோ, சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷாவின் இந்த ‘சைலண்ட்’ விசிட் தற்போது கோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *