மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர்.சி இன்று வேட்பு மனு தாக்கல் !!

மதுரை;
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த 30ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

வரும் 6ம் தேதியுடன் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய நிறைவுப்பெறுகிறது. மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர்.சி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சுந்தர்.சி தனது மனைவி குஷ்பு, ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோருடன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *