விஜய் பிரச்சாரத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகம் பேர் கூடியதாக தவெக நிர்வாகி புதியவன் மீது கோரிமேடு காவல் நிலையத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அன்பரசன் புகார் !!

புதுச்சேரி:
தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகம் பேர் கூடியதாக அக்கட்சி நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 3-ம் தேதி தவெக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக விஜய் பிரசாரத்துக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே கூட வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, தவெக நிர்வாகி புதியவன் மீது கோரிமேடு காவல் நிலையத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அன்பரசன் புகார் அளித்துள்ளார்.

அதில், தட்டான்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட மைதானத்தில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் 8 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதாகவும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் கூறியிருந்தார்.

புகாரின் அடிப்படையில், தவெக நிர்வாகி புதியவன் மீது கோரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *