தெலுங்கானா ;
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 42 பேரின் குடும்பத்தினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,” தெலுங்கானாவிலிருந்து மக்கா புனிதப்பயணம் சென்ற பேருந்தும் டீசல் லாரியில் மோதிய விபத்தில் 42 இஸ்லாமியர்கள் உயிரிழந்தது அதிர்ச்சி, வேதனை அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதுடன் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரண உதவி செய்ய வேண்டும்” என்றார்.