ராக்கெட் வேகத்தில் ரன் ரேட்டை உயர்த்திய டிம் டேவிட்!!

பெங்களூரு ;
நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சிஎஸ்கே அணி தன் 3-வது தோல்வியைச் சந்தித்தது.

இந்த முறை ஆர்சிபி அணி சிஎஸ்கேயை அடித்து நொறுக்கியது. தோனி கேப்டன்சி காலங்களில் ஆர்சிபி அணி சிஎஸ்கேவிடம் சொல்லி சொல்லி உதை வாங்கிய காலமெல்லாம் மலையேறிவிட்டது போலும்!

நேற்று கேப்டன் படிதார் ஒருபுறம் சீறி வெடித்துக் கொண்டிருந்தார். 15 பந்துகளில் 40 என்று பவுண்டரிகளை தன் இஷ்டப்போக்கில் விளாசிக் கொண்டிருந்தார். அப்போது 6 பந்துகளில் 3 ரன்கள் என்றுதான் டிம் டேவிட் இருந்தார்.

ஆனால் படிதாருக்கு அடுத்த ஸ்ட்ரைக் வாய்ப்புக் கிடைப்பதற்குள் டிம் டேவிட் 23 பந்துகளில் 65 ரன்கள் என்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்தார்.

16.2 ஓவர்களில் 174/3 என்று இருந்த ஆர்சிபியின் ஸ்கோர் அடுத்த 17-18 பந்துகளில் 237 ஆக உயர்ந்தது. இந்த 17-18 பந்துகளில்தான் டிம் டேவிட் 8 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசித்தள்ளினார். இந்த அதிரடி வேகம் சிஎஸ்கேவில் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

ஸ்டீபன் பிளெமிங் உள்ளிட்ட பயிற்சிக்குழுவின் முகத்தில் ஈயாடவில்லை. இந்த அதிரடியினால் ஒருகட்டத்தில் 220 ரன்கள் வரும் என்ற நிலை 250 ஆக மாறியது. தோல்விக்கு இந்த அதிரடியே பிரதான காரணம் இதனை ஸ்டீபன் பிளெமிங் மிகச்சரியாக அவதானித்துள்ளார்:

“நாங்கள் சேசிங் செய்த போது 15 ஓவர்கள் ஸ்கோரை எடுத்துப் பார்த்தால் ஆர்சிபியை விட அதிக ஸ்கோரையே எடுத்திருந்தோம். அங்கிருந்துதான் அவர்கள் ராக்கெட் வேகத்தில் ரன்களைக் குவிக்க போட்டியை இழக்க நேரிட்டது.” என்றார்.

ஆம்! 15 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 153/3 என்று இருந்தது, அதே 15 ஓவர்கள் முடிவில் சேசிங்கில் சிஎஸ்கே 165/6 என்று முன்னணியில் இருந்தது. ஒருவேளை அன்ஷுல் காம்போஜ் வீசிய லெக்ஸ்டம்ப்பை பெயர்த்த யார்க்கர் பந்து நோ-பாலாக இல்லாமல் இருந்திருந்தால் கூட இலக்கு கொஞ்சம் குறைந்திருக்கலாம். நோ-பாலின் ஃப்ரீஹிட்டை டேவிட் சிக்சர் விளாசினார்.

அடுத்த ஜேமி ஓவர்டன் ஓவர் படுமோசம், டிம் டேவிட் 4 சிக்சர்கள் ஒரு இரண்டு, மற்றும் ஒரு நான்கு என்று 30 ரன்களை விளாசினார். 21 பந்துகளில் இந்த ஓவரில்தான் டிம் டேவிட் அரைசதம் கடந்தார், இதே ஒவரின் இன்னொரு மிட்விக்கெட் சிக்ஸ் மேற்கூரையின் மேல் போய் விழுந்த 106 மீட்டர் சிக்சராகும். இந்த சிக்சரைப் பார்த்து கோலியே தன் இருக்கையில் இருந்து எழும்பி விட்டார்.

25 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்தார் டிம் டேவிட், இதில் 68 ரன்கள் கடைசி ஓவர்களில் வந்ததே. சிஎஸ்கே அங்கேயே போட்டியை இழந்தது.

இருப்பினும் கொஞ்சம் நஞ்சமிருக்கும் நம்பிக்கையை சர்பராஸ் கன் தன் அபார பேட்டிங்கினால் மீட்டெடுத்தார், ஆனால் அவரும் குருனாள் பாண்டியாவிடம் ஸ்டம்ப்டு ஆக கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது.

சிஎஸ்கே அணி நிர்வாகம் தன் பந்து வீச்சை நிச்சயம் மாற்றி அமைக்க வேண்டும். மே.இ.தீவுகளின் ஸ்பின்னர் அகீல் ஹுசைன் மற்றும் ஸ்ரேயஸ் கோபால் ஆகியோரை லெவனில் சேர்க்க வேண்டும்.

அதே போல் ஜேமி ஓவர்டனுக்குப் பதிலாக ஜாக் ஃபோல்க்ஸைக் கொண்டு வர வேண்டும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *