த.வெ.க. அரசுக்கு மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் ஆதரவு!!

சென்னை:
தமிழக சட்டசபையில் நடைபெற்று வரும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். அதனை தொடர்ந்து த.வெ.க. அரசை ஆதரிக்கும் கட்சிகள் உரையாற்றி வருகின்றனர்.


அந்த வகையில், அ.ம.மு.க.சார்பில் மன்னார்குடியில் நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. காமராஜ் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு அளித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய காமராஜ்,”நேற்றே கூறி விட்டேன். நேற்று, இன்று, நாளை என்று ஐந்தாண்டு காலமும் த.வெ.க. அரசுக்கு ஆதரவளிப்பேன்.


அவதார தலைவர் நமது முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கும் முதலமைச்சர் என்னையும் காப்பார். முதலமைச்சர் விஜய் ஆட்சி பொறுப்பெற்று 4 நாட்கள் தான் ஆகிறது.

அதற்குள் திருச்சியில் 300-க்கும் மேற்பட்ட ரவுடிகள் சரண் அடைந்துள்ளனர்.

முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைந்த பின்பு கடத்தல்காரர்கள், கஞ்சா விற்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *