சினிமாவில் நடிகைகள் ஓரங்கட்டப்படுகிறார்கள்- நடிகை பார்வதி வேதனை!!

சென்னை:
‘பூ’, ‘மரியான்’, ‘சென்னையில் ஒருநாள்’, ‘தங்கலான்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி. இவர், மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.


அடிக்கடி பரபரப்பு கருத்துகள் கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் பார்வதி, இந்த முறை ‘சினிமாவில் பெண்கள் ஓரங்கட்டப்படு கிறார்கள்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நடித்த படங்கள் ஹிட் ஆகிவிட்டால், நம் திறமை சினிமாவில் கொண்டாடப்படும் என்று நினைத்தேன். ஆனால் நடந்ததோ வேறு. திறமை இருந்தும் நான் ஏன் சினிமாவில் ஓரங்கட்டப்படுகிறேன்? என்ற கேள்வி எனக்குள் எப்போதுமே உண்டு.

சினிமாவை பொறுத்தவரை பெண்கள் என்பவர்கள் தேவையற்றவர்கள் தான்.

அப்படித்தான் நினைக்கிறார்கள். எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்களாக இருந்தாலும், நாம் பேசும் உண்மைகள் சங்கடத்தை உண்டாக்கினால், நம்மை எளிதாக தூக்கி எறிந்துவிடுவார்கள்.


இதுதான் சினிமாவின் எதார்த்தம், பிரச்சினையும் கூட. இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *