கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத் தினருக்கு அரசு வேலை கொடுப் பது ஏற்புடையது அல்ல – அர்ஜுன் சம்பத்!!

காரைக்குடி:
ஊழல் வழக்குகளில் சிக்கிய திமுக முன்னாள் அமைச்சர்கள் ஓடி ஒளியக் கூடாது இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன்சம்பத் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


போதையை ஒழிக்க முதலில் மதுக்கடையை மூட வேண்டும். திமுக, அதிமுகவினர் தான் சாராய ஆலைகளை நடத்துகின்றனர். தவெகவினர் சாராய ஆலைகள் நடத்தவில்லை. அதனால், விஜய்யால் மதுக்கடையை மூடிவிட முடியும்.

மதுக்கடையால் தான் அரசு நடத்த முடியும் என்ற மூடநம்பிக்கையை அரசியல்வாதிகள் விதைத்துள்ளனர். அது தவறானது.

லஞ்ச, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை வரவேற்கிறோம். பணத்தை காப்பாற்ற தான் பிற கட்சியினர் தவெகவுக்கு செல்கின்றனர். விஜய் கொள்கை பிடித்துச் செல்லவில்லை. இதுபோன்ற விஷயத்தை விஜய் ஊக்குவிக்க கூடாது.

கம்யூனிஸ்ட் தூண்டுதல் பேரில் ஆளுநர் மீது கடுமையான விமர்சனத்தை அமைச்சர் நிர்மல் குமார் வைத்துள்ளார். அது கண்டிக்கத்தக்கது.

ஆளுநர், மத்திய அரசுடன் மோதல் போக்கை உருவாக்க நினைக்கின்றனர். அதற்கு தவெக துணைபோகக் கூடாது.

மத்திய அரசுடன் ஒத்துழைத்து தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும். இந்துக்களை அவதூறாக பேசும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்துகளையும், மோடியையும் அவதூறு பேசுவோரை கைது செய்ய வேண்டும்.

திமுகவை போன்று இல்லாமல் இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.

கிறிஸ்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்காமல், அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டும்.

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுப்பது ஏற்புடையது அல்ல. உங்களது கட்சி சார்பில் உதவலாம்.

அரசு வேலை கொடுப்பது; அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது போன்றதாகிவிடும்.

அந்த சம்பவத்தில் நீங்கள் நிரபராதியாக இருங்கள்; உங்கள் மீது பழி சுமத்தியதாக கூட இருக்கட்டும். அதற்காக அரசுப் பணத்தை செலவழிப்பதை ஏற்க முடியாது.

திமுகவினருக்கு துணிச்சல் கிடையாது. நேர்மையானவராக இருந்தால் செந்தில் பாலாஜி சரணடையலாம்.

சாலையை அமைக் காமல் ஊழல் செய்த எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் படுத்துக் கொண்டார்.

ஊழல் வழக்குகளில் சிக்கிய திமுக முன்னாள் அமைச்சர்கள் நீதிமன்றத்தில் நிரபராதி என நிரூபிக்க வேண்டும்; ஓடி ஒளியக் கூடாது. மு.க.ஸ்டாலின் கூட பயத்தால் தான் லண்டனுக்கு சென்றுள்ளார் என்று நினைக்கிறேன்.

மு.க.ஸ்டாலின் பேரன் லண்டனில் வெவ்வேறு மொழிகளில் படிக்கலாம். ஆனால், நாம் படிக்க கூடாது என்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *