வளைந்து நின்ற முதுகு​கள் தலைநிமிர்ந்து தன்​மானம் காக்க, தன்​னையே இந்த மண்​ணுக்​குத் தந்த பெரி​யாருக்கு புகழ் வணக்​கம் – முதல்வர் ஸ்டாலின் !!

சென்னை:
திரா​விடர் கழகத்​தின் நிறு​வனர் பெரி​யாரின் 52-வது நினைவு தினம் தமிழகம் முழு​வதும் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. அதையொட்​டி, சென்னை அண்ணா சாலை​யில் உள்ள பெரியார் சிலை முன்பு வைக்​கப்​பட்​டிருந்த உரு​வப் படத்​துக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

இந்த நிகழ்ச்​சி​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள் மு.பெ.​சாமி​நாதன், பி.கே.சேகர்​பாபு, டி.ஆர்​.பி.​ராஜா, கயல்​விழி செல்​வ​ராஜ் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்.

முதல்​வர் தனது எக்ஸ் தளபதி​வில், “வளைந்து நின்ற முதுகு​கள் தலைநிமிர்ந்து தன்​மானம் காக்க, தன்​னையே இந்த மண்​ணுக்​குத் தந்த பெரி​யாருக்கு புகழ் வணக்​கம்.

தமிழர்​கள் தலைகுனி​யாமல் ஆதிக்​கத்​துக்கு அடிபணி​யாமல், பகுத்​தறி​வுச் சிந்​தனையோடு சக மனிதரை நேசித்து சமத்​து​வத்​தைப் பேணுவ​தே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்​புக்கு நாம் செலுத்​தும் நன்​றி.

பெரி​யார் எனும் பெருஞ்​சூரியனைத் திருட​வும் முடி​யாமல் தின்று செரிக்​க​வும் முடி​யாமல் திண்​டாடும் பகைவர் கூட்​டத்​தின் வஞ்சக எண்​ணங்​களை வீழ்த்​த ஒற்​றுமை உணர்​வோடு ஓரணி​யில் தமிழகம் நின்​றால் என்​றும் வெற்றி நமதே” என்று குறிப்​பிட்​டுள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *