பரந்தூர் விமான நிலை​யத்​துக்​காக கையகப்​படுத்​தப்​பட்ட நிலங்​களை விவ​சா​யிகளிடமே ஒப்​படைக்க வேண்​டும் என மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் வலி​யுறுத்​தல்!!

சென்னை:
பரந்தூர் விமான நிலை​யத்​துக்​காக கையகப்​படுத்​தப்​பட்ட நிலங்​களை விவ​சா​யிகளிடமே ஒப்​படைக்க வேண்​டும் என மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

காஞ்​சிபுரம் மாவட்​டம், பரந்​தூர் மற்​றும் அதன் சுற்​று​வட்​டார கிரா​மங்​களை உள்​ளடக்கி புதிய விமான நிலை​யம் அமைக்​கும் திட்​டம் முழு​மை​யாக கைவிடப்​படு​வ​தாக சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் அறி​வித்​திருந்​தார்.

இதையடுத்து பரந்​தூர் விமான நிலை​யத்​துக்​காக கையகப்​படுத்​தப்​பட்ட நிலங்​களை அரசு என்ன செய்​யப் போகிறது என்று சட்​டப்​பேர​வை​யில், எம்​எல்​ஏக்​கள் கேள்வி எழுப்​பினர்.

அதற்கு பதிலளித்து பேசிய தொழில்​துறை அமைச்​சர், “அந்த நிலங்​களை மாற்​றுத் தொழில் திட்​டங்​களுக்கு பயன்​படுத்த போகிறோம்” என்று தெரி​வித்​துள்​ளார்.

நிலம் கையகப்​படுத்​துதல், மறு​வாழ்வு மற்​றும் மறு குடியேற்ற சட்​டம் 2013-ன் அடிப்​படை​யில், குறிப்​பிட்ட திட்​டத்​துக்​காக கையகப்​படுத்​தப்​பட்ட நிலம் 5 ஆண்​டு​களுக்​குள் பயன்​படுத்​தப்​பட​வில்லை என்​றாலோ அல்​லது அந்​தத் திட்​டம் கைவிடப்​பட்​டாலோ, நிலத்​தைச் சம்​பந்​தப்​பட்ட விவ​சா​யிகளிடமே மீண்​டும் ஒப்​படைக்க வேண்​டும்.

வேறு ஒரு திட்​டத்​துக்கு அந்த நிலத்தை மாற்ற முடி​யாது. எனவே, சட்​டத்​துக்கு விரோத​மாகத் தமிழக அரசு நடந்​து​கொள்​ளக் கூடாது. விவ​சா​யிகளிடம் நிலத்தை ஒப்​படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *