டி20 உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிப்பு!!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடக்க உள்ளது. லீக் போட்டிகள் அமெரிக்காவிலும், நாக் அவுட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸிலும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த கிரிக்கெட் போட்டி தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் 4 குரூப்-களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள 20 அணிகளும் மே 1- ந் தேதிக்குள் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்து ஐசிசியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

இந்த அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக மீண்டும் நியமன செய்யப்பட்டுள்ளார். தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ,

டேரல் மிட்சல், ஜேம்ஸ் நீஷம், மார்க் சேப்மேன், பிரேஸ்வெல், ஆகியோரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மேலும் நட்சத்திர வீரர் கிளென் பிலிப்ஸ் பேக் அப் விக்கெட் கீப்பர், ஸ்பின்னராக சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களாக சான்ட்னர், இஷ் சோதி ஆகியோர் இதில் இடம் பிடித்துள்ளனர்.

மேலும் வேகப்பந்துவீச்சாளர்களாக போல்ட், சவுதி, ஹென்ரி, ஃபெர்குசன் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.4வது முறையாக டி20 உலகக்கோப்பையில் கேன் வில்லியன்சன் கேப்டனாக நியூசிலாந்து அணியை வழி நடத்த உள்ளார்.

இதற்கு முன் அவரது தலைமையில் நியூசிலாந்து அணி 2016 -ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி சுற்றுக்கும், 2021- ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இறுதி சுற்றுக்கும், 2022 -ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கும் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *