அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவு !!

விஷச் சாராய விவகாரம் தொடர்பாக பேரவையில் சபாநாயகர் எச்சரிக்கையை மீறி அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சூழலில் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். விஷ சாராய மரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் சட்டப்பேரவை வாயிலில் அமர்ந்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமாரை குண்டுக்கட்டாக அவை காவலர்கள் வெளியேற்றினர். அமளியில் ஈடுபட்ட அதிமுகவி னரை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *