சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென தமிழ்நாடு சட்டப் பேரவையில் தனித்தீர்மானம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !!

மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்கீழ், சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் , மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே தொடங்கவும், அதனோடு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம உரிமை, சம வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்கள் தீட்ட, சட்டங்கள் இயற்ற சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம்.

மாநில அரசு சர்வே எடுத்து, புள்ளி விவரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு சட்டங்களை இயற்றினால், பின்வரும் நாட்களில் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது 2008ஆம் ஆண்டு புள்ளிவிவரம் சேகரிக்கும் சட்டத்தின்கீழ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இயலாது; மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்கீழ், சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதுதான் சரியாக இருக்கும் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *