திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 2 பேருந்துகளில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள டிக்கெட் பண்டல் திருட்டு!!

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 2 பேருந்துகளில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 35 பயணச்சீட்டு கட்டுகளை கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் செங்குன்றம் பகுதியில் இருந்து சென்னை மாநகரப் பேருந்து தடம் என்505 திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் ஏறுவதற்கு நின்றுள்ளது.

அப்போது பேருந்து நிலையத்தில் உள்ள நேர காப்பாளர் அறைக்கு நடத்துனர் மற்றும் ஓட்டுநர் நேரத்தை பதிவு செய்து கொண்டு வந்து பார்த்தபோது ஓட்டுநர் இருக்கையின் அருகே பையில் வைக்கப்பட்டிருந்த 12 ரூபாய், 15 ரூபாய், 41 ரூபாய் அடங்கிய 31 டிக்கெட் கட்டுக்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதேபோல் அதன் அருகிலேயே நின்று கொண்டிருந்த மற்றொரு அரசு மாநகர பேருந்தில் இருந்தும் டிக்கெட் பண்டல்கள் கொள்ளை அடிக்கப்பட்டது பதறிப்போன ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் நேர காப்பாளருக்கு தகவல் அளித்துவிட்டு திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் காரணமாக இரண்டு பேருந்துகளும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான டிக்கெட் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் இடையே அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *