”டாஸ்மாக் வேண்டாம் என்றால் பாமகவை ஆதரிக்க வேண்டும்” – அண்ணாமலை!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசன், பாரிவேந்தர், தேவநாதன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளரை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கோட்பா சட்டத்தை சிறுவயதில் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டு கொண்டுவந்தது தமிழகத்திற்கு பெருமை.

இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற கொள்கையோடு 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பாமக போட்டியிடுகிறது.

இதற்கு காரணம் மாற்றம் கொண்டு வரவேண்டும், அரசியல் வரலாறு படைக்க வேண்டும் என்பதற்காகவே. தமிழகத்தின் அரசியலை மாற்றகூடிய தேர்தல், ஜெயலலிதாவின் நம்பிக்கையாக இங்கு ஓ.பி.எஸ் ம், டி.டி.வி தினகரன் உள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவின், 33 சதவீத வாக்கை 27 சதவீத வாக்காக இந்த கூட்டணி குறைக்க வைத்துள்ளது. இதுவே இந்த கூட்டணியின் முதல் வெற்றி. 2026-ஆம் ஆண்டு தேர்தல் மாற்றத்தை கொண்டு வருவேன், டாஸ்மாக் வேண்டாம் என்றால் பாமகவை ஆதரிக்க வேண்டும்.

புரட்சி தலைவி அம்மாவின் தொண்டர்கள் பாமகவிற்கு தான் வாக்களிப்பார்கள். எது வந்தாலும், எது கொடுத்தாலும் நமக்கானது என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லியதை போன்று நம்முடையது என்று நினைத்துக்கொண்டு மாம்பழத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் குறிக்கோள் தமிழ்நாட்டின் முன்னேற்றம்தான். தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *