வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மஞ்சள் அனகோண்ட பாம்புகள் 20 குட்டிகளை ஈன்றுள்ளன.
சென்னை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள், பறவைகள் மற்றும் உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக இருந்து வரும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.
இங்கு பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.200ம், பேட்டரி மற்றும் சஃபாரி வாகனக் கட்டணம் ரூ.150 ஆகவும் வசூலிக்கப்படுகிறது.
இந்த பூங்காவில் உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா பாம்புகள் 2 பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை இரண்டும் தற்போது 20 குட்டிகளை ஈன்றுள்ளன. ஒரு அனகோண்டா பாம்பு 9 குட்டிகளையும், மற்றொன்று 11 குட்டிகளையும் ஈன்றுள்ளன.
இது பூங்கா அதிகாரிகள், ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குட்டிகளை பூங்கா ஊழியர்கள் தனியாக ஒரு கண்ணாடி கூண்டில் அடைத்து பராமரித்து வருகின்றனர்.
அதேபோல இங்கு பராமரிக்கப்பட்டு வரும் , இந்தியாவில் மட்டுமே காண்டப்படும் காட்டுப் பூனை ஒன்றும் 3 குட்டிகளை ஈன்றுள்ளது.