நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் – உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அவ்வபோது மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில் குன்னூர் உதகை மலை ரயில் பாதையில் லவ்டேல் அருகே மரம் விழுந்து மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே நடைபெறும் சீரமைப்பு பணிகள் காரணமாக நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் – உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உதகை மலை ரயில் சேவை ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.