திருச்சியில் ரூ.1,100 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையம்!!

திருச்சியில் ரூ.1,100 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது.

புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய ஒருங்கிணைந்த முனையம் 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே சமயத்தில் 4,000 சர்வ தேச பயணிகள், 1,500 உள்நாட்டு பயணிகளை கையாள முடியும்.

இங்கு புறப்பாடு பகுதியில் 10 வாயில்கள், வருகை பகுதியில் 6 வாயில்கள், 40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 செக்-இன் மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 10 இடங்களில் ஏரோ ப்ரிட்ஜ், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள், 26 இடங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர், 1,000 கார்களை நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம் புதிய முனையத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சியில் ரூ.1,100 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது. திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையத்தை கடந்த ஜனவரி 2ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்; பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் இன்று முதல் புதிய விமான முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *