தெலுங்கானாவில் மது விருந்து நடத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள்!!

அனுமதி இன்றி மது விருந்து நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – தெலுங்கானாவில் புதிய கட்டுப்பாடுகள்!!

திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் தனியார் விடுதிகள், வீடுகள் மற்றும் ஓட்டல்களில் அனுமதி இன்றி மது விருந்து நடத்தப்படுகிறது.

இதில் பல அசம்பாவிதங்களும் நடக்கின்றன. இதனை கட்டுப்படுத்த போதைப்பொருள் கட்டுப்பாடு தனிப்பிரிவு மற்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மது விருந்து என்ற பெயரில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

இதனால் மாநிலத்தில் மது விருந்து நடத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 6 பாட்டில் மதுவுக்கு மேல் வாங்கி விருந்து வைத்தால் கட்டாயம் அந்த விருதுக்கு அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11 மணி மற்றும் மாலை 4 மணி என 2 நேரங்களில் மட்டுமே மது விருந்து தொடங்கும் வகையில் நேர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மது விருந்து நடத்துபவர்கள் வீடு மற்றும் விடுதிகளில் நடத்தினால் ஒரு நாளைக்கு ரூ 10,000 வரை கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும்.

வணிக வளாகங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பகுதிகள் ஓட்டல்களில் மது விருந்து நடத்தினால் டிக்கெட் எண்ணிக்கை பொறுத்து கட்டணங்களை செலுத்தி முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்த காரணத்தை கொண்டும் அது அளிக்கக்கூடாது. அனுமதி இன்றி மது விருந்து நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இடத்தின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *