சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

சென்னை தீவுத்திடலில் இரவு நேர பார்முலா 4 ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுது. இரண்டாவது நாளான நேற்று f4 இந்தியன் ரேஸ், இந்தியன் ரேசிங் லீக் மற்றும் ஜேகே எஃப்எல் ஜிபி 4 என மூன்று வகை போட்டிகளில் பிரதான சுற்று போட்டிகள் நடைபெற்றது.

இதில் ஜேகே எஃப்எல் ஜிபி 4 பிரிவில் முதல் ரேஸில் டில்ஜித் என்ற டார்க் டான் அணியை சேர்ந்த வீரர் முதல் இடத்தை பிடித்தார்.

மொத்தம் 8 லேப்ஸ்களை கடப்பதற்கான இந்த போட்டியில் பாதியிலேயே விபத்தின் காரணமாக பந்தயம் நிறுத்தப்பட்டது. இதில் கடைசிவரை முன்னிலையில் இருந்த டார்க் டான் அணியை சேர்ந்த டில்ஜித் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இந்தியன் ரேசிங் லீக் முதல் ரேசில் ஹய்முன் முதலிடத்தை பிடித்தார். கோவா அணியை சேர்ந்த அவரும் அதே கோவா அணியை சேர்ந்த மற்றொரு வீராங்கனை கேப்ரியல் ஜெய்கோவாவும் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.

இந்தியன் ரேசிங் லீக் இரண்டாவது ரேஸில் போர்ச்சுகல் நாட்டை சார்ந்த டெல்லி அணி வீரர் ஆல்வெரோ முதலிடைத்தை பெற்றனர்.

இரண்டாவது இடத்தை கோவா அணியை சார்ந்த இந்திய வீர சுனில் ஷாவும், மூன்றாவது இடத்தில் பெங்களூரு அணியை சார்ந்த இந்திய வீரர் ரிஷான் ராஜுவும் பிடித்தனர்.

இதேபோல், ஃபார்முலா 4 இந்தியன் ரேஸில் முதல் பந்தயத்தில் ஆஸ்திரேலியாவை சார்ந்த கொச்சி வீரர் பார்டர் முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை இந்தியாவை சேர்ந்த பெங்கால் வீதத் ருஹான் அல்வா, இந்தியாவை சார்ந்த பெங்களூர் அணி வீரர் அபை மோஹன் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

தொடர்ந்து போட்டிகளுக்கு இடையே தமிழ்நாடு மகளிர் பைக் அணியின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனையடுத்து ஃபார்முலா இந்தியன் ரேஸில் இரண்டாவது பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹைதராபாத் அணியின் உரிமையாளரும், நடிகருமான நாக சைதன்யா ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹைதராபாத் அணியின் அலிபாய் முதலிடத்தையும், அகமதாபார் அணியின் திவி நந்தன் இரண்டாவது இடத்தையும், ஜேடன் பாரியர்ட் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *