நீரிழிவு நோய் வருவதை தடுக்க உதவும் வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்!!

உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாதது போல காணப்பட்டாலும் வெங்காயத்தில் இருக்கும் அரிய மருத்துவ குணங்கள் வேறு எதிலும் இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெங்காயம் அல்லியம் வகையைச் சேர்ந்த பூண்டு தாவரம் ஆகும். ஒரு கையளவு வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, சர்க்கரை, வைட்டமின்-சி, வைட்டமின்-பி 6, பொட்டாசியம், மாங்கனீசு, செம்பு உள்பட பல சத்துக்கள் உள்ளன.

மனிதர்களின் குடலில் உணவு செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன.

சில காரணங்களால் குடலில் இந்த பாக்டீரியாக்கள் குறைந்து விடும்போது நீரிழிவு முதல் பெருங்குடல் புற்றுநோய் வரை பல நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெங்காயத்தில் பிரக்டோலிகோ சாக்கரைடுகள் உள்ளன. அவை, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கான உணவளிக்கும் ப்ரீபயாடிக்குகளாக செயல்படுகிறது. இதன் மூலம் உண்ணும் உணவு முழுமையாக சீரணம் ஆகி, உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

பொதுவாகவே வயதானவர்களுக்கு எலும்பு பலவீனம் ஏற்படும். எலும்பு தேய்மானத்தை தடுப்பதில் வெங்காயத்துக்கு நிகர் எதுவும் இல்லை.

வெங்காயத்தில் உள்ள கரிம சல்பர் கலவைகள் உடலில் கொழுப்பின் அளவை குறைத்து இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. நீரிழிவு நோய் வருவதை தடுக்க உதவுகிறது. எனவே வெங்காயத்தை உணவில் தவறாமல் சேர்ப்பது பல நன்மைகளை தரும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *