மத்திய தொல்லியல் மற்றும் கணக்கெடுப்பு குழுவை மத்திய அரசு திடீரென கலைத்துள்ளது!!

மத்திய தொல்லியல் மற்றும் கணக்கெடுப்பு குழுவை மத்திய அரசு திடீரென கலைத்துள்ளது. இது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி வரும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல பொருளாதார நிபுணரும், இந்தியாவின் புள்ளியியல் துறையின் முன்னாள் தலைமை நிபுணருமான பிரணாப் சென் தலைமையில், 14 உறுப்பினர்களைக் கொண்ட புள்ளிகளுக்கான நிலைக் குழு செயல்பட்டு வந்தது.

இந்தக்குழு ஒன்றிய அரசுக்கு தேவையான புள்ளியியல் தரவுகளுக்கான பிரதான அச்சாணியாக இருந்துவந்தது.

இந்த குழுவை தற்போது மத்திய அரசு திடீரென கலைத்துள்ளது. அத்துடன் குழு கலைக்கப்பட்டதற்கான போதிய விளக்கத்தை ஒன்றிய புள்ளியியல் துறை அமலாகத் துறை அமைச்சகம் குழுவின் உறுப்பினர்களுக்கே முறையாக அளிக்கவில்லை என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

மத்திய புள்ளிகள் மற்றும் கணக்கெடுப்பு குழுவானது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்னெடுப்பை எடுப்பதோடு, புள்ளிவிவரங்கள் மூலம் மனித வள மேம்பாட்டுக்கான தேசிய உத்திகளை உருவாக்கும் பிரதான பணிகளை செய்து வந்தது.

இந்த சூழலில் 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்டு இருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படவில்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா கூட்டணி மட்டுமல்லாது ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை வலியுறுத்தி வருகின்றன.

அத்துடன் பாஜகவின் தாய் அமைப்பாளர் ஆர்எஸ்எஸ் அமைப்பும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திடீரென புள்ளியில் மற்றும் கணக்கெடுப்பு குழு கலைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் உறுப்பினர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பை எப்போது நடத்துவது என தொடர்ந்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வந்ததால் இந்த குழு தற்போது கலைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மீண்டும் தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *